இன்று நரசிம்மர் ஜெயந்தி; பழமையான ஆனைமலை நரசிம்மர் குடவரை கோவில் பற்றி தெரிஞ்சிக்கோங்க.!



madurai-otthakadai-narasimha-temple

 

மதுரை மாவட்டத்தில் உள்ள யா. ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதியில் இருக்கும் குடவரை கோவிலில் வீற்றிருக்கும் யோக நரசிம்மர் திருவிக்கோவில், கிபி 7ம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் மன்னரால் யானைமலையை குடைந்து உருவாக்கப்பட்டது. 

இங்குள்ள யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமி தாங்கி காட்சி தருகிறார். தாயார் நரசிங்கவள்ளி நினைத்ததை நிறைவேற்றும் அன்னையாக குடியிருக்கிறார். இவருக்கு சேலையை நேர்த்திக்கடனாக வழங்கினால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. 

யா.ஒத்தக்கடை நரசிம்மர் கோவில்:

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமான யானை மலையின் வடகிழக்கு மூலையில் அமையப்பெற்றுள்ள குடவரை கோவிலில் இருக்கும் நரசிம்மரின் தரிசனம் வாழ்வில் வளம்பெற வழிவகை செய்யும் என்பது சன்னதோர் வாக்கு.
 
குடும்பத்தில் நிலவும் பிரச்சனை, கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, தொழில் விரோதம், கடன் பிரச்சனை என பல தொல்லைகளில் இருந்து விடுதலை தரும் அம்சமாக நரசிம்ம நரசிங்கவள்ளி இருக்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில், நரசிங்கம் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி; ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!