தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் குளித்த மதுரை மாணவன்... பரிதாபமாக உயிரிழப்பு.!



madurai-student-tragically-died-after-taking-a-bath-in

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில்  நண்பர்களுடன் சென்று குளித்த மதுரையைச் சார்ந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சில நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா துறையும் அரசாங்கமும் தடை விதித்து இருக்கின்றன. மதுரை தெற்கு தெருவை சேர்ந்த ஹரிஷ் என்ற 18 வயது இளைஞர்  தனது நண்பர்கள் 4 பேருடன் வார விடுமுறையை  கொண்டாட கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

tamilnadu

கோத்தகிரியில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் அரசாங்கத்தால் முற்றிலும் தடை செய்யப்பட்ட சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுண்டட்டி நீர்வீழ்ச்சியை அடைந்த அவர்கள்  அதில் குளிக்க தயாரான போது  அவரது நண்பர்கள் நான்கு பேரும் தயங்கி நின்றுள்ளனர். ஆனால் ஹரிஷ் மட்டும் நீரில் குதித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்கடியில் இருந்த பாறையில் அவர் சிக்கியிருக்கிறார். இதனைக் கண்டு பதற்றமடைந்த அவரது நண்பர்கள்  கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தியரைப்புத் துறையினர்  பாறையின் அடியில் சிக்கி இருந்த ஹரிசின் உடலை மீட்டனர். அவரது உடலைப் பார்த்து நண்பர்கள் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது . மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நீலகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.