மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெரு நாய்களால் தீராத தொல்லை: போஸ்டர் அடித்து கௌரவப்படுத்தி நூதன கண்டிப்பில் இளைஞர்.! அன்பு டீம் அட்டகாசங்கள்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லையானது அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், எஸ்.ஆர்.சிராஜ் என்பவர் தனது பெருமக்களின் வேதனையை வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றாக ஒட்டி அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டி இருக்கிறார்.
மேலும் அந்த போஸ்டரில் திருநெல்வேலி 38-வது வார்டு பகுதியை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு குழுவின் உறுப்பினர்கள் பெயர் புண்ணியமூர்த்தி (வயது 5 மாதம்). இவரின் வேலை சண்டை இழுத்தல், இவரால் அடிபட்டவர்கள் ஒரு ஆள் என போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.
மேலும் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் எடுத்து அவர்களுக்கு என தனியாக பெயர் வைத்து அவர்களின் குணம் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விவரத்துடன் ஒட்டியிருக்கிறார்.
இவர்களை கட்டுப்படுத்த பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோடான கோடி நன்றிகள் என்றும் குறிப்பிட்டார்.