மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை! தொழிலாளர் மீது பாய்ந்த போக்சோ!!
ரவி என்னும் 48 வயதுடைய நபர் திருப்பூரில் உள்ள செல்லம் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரவி அவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை கடந்த 2022 அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பின்னர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், போலீசார் ரவியை கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கை தீவிர விசாரணை செய்த நீதிபதி பாலு, ரவிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.