மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனில் அம்பானிக்கு நெட் கடன் கேட்டு கடிதம்... யாருய்யா நீங்கல்லாம்?.. திரும்பி பார்க்க வைத்த நூதன டெக்னீக்.!
அனில் அம்பானிக்கு ராஜபாளையத்தை சார்ந்தவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "நெட் இழந்தோர் சங்கத்தின் சார்பாக வேண்டுகோள். பொருள்: அரை ஜிபி டேட்டா கடன் கேட்பது சம்பந்தமாக.
மதிப்பிற்குரிய ஐயா, நான் இன்று காலை முதல் தங்களின் நெட் சேவையை குண்டக்க மண்டக்க நோண்டி உபயோகம் செய்து விட்டதால், 2 GB நெட் காலியாகி நடுவீதியில் நிற்கிறேன். மொபைலை நோண்டாமல் எனது கைவிரல்கள் கிடுகிடுவென ஆடுகிறது. மனசு படபடக்கிறது. ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது.
கால்கள் நடக்க இயலாமல் தவிக்கிறது. கண்கள் தெரியவில்லை. வாய் உலர்கிறது. உதடு வறண்டு போய்விட்டது. பசியும் தூக்கமும் மறந்துவிட்டது. ஆகையால், நாளை நீங்கள் கொடுக்க இருக்கும் 2 ஜிபி டேட்டாவை இன்று கடன் கொடுத்து உதவுமாறும், மேற்கண்ட வியாதிகள் எனக்கு வராமல் தவிர்த்து எனது உயிரை பாதுகாக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் நாளை கொடுக்கும் ஜி.பியில் அரை ஜீ.பையினை இன்று பிடித்தம் செய்து கொண்டாலும் பிரச்சனை இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பது தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.