திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில் சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாராபுரம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வருபவா் தினேஷ்பாபு. கூலி தொழிலாளியான இவா் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி கடந்த மாா்ச் 19 ஆம் தேதி அழைத்துள்ளாா். இதனை நம்பிச்சென்ற சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் தினேஷ்பாபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.