மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேரில் சந்தித்த முதல் நாளே திருமணம்..! இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது..!!
சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடந்த 14ஆம் தேதி திருமுடிவாக்கத்தை சேர்ந்த 17வயது சிறுமி, காணாமல் போனதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், குன்றத்தூர் முருகன் கோயில் அருகில் சிறுமி தனது காதலன் சந்தோஷ்குமாருடன் (19) இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சந்தோஷ்குமாரும் அந்த சிறுமியும் ஆகியோர் கடந்த மூன்று மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர். முதன்முதலாக நேற்று முன்தினம் மாலை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் கலந்து பேசி பல்லாவரம் பிரதான சாலையில் பம்மல் பகுதியில் இருக்கும் புத்துக் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் இரவு சந்தோஷ்குமாரின் வீட்டில் தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.