மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவிநாசியில் லாரி மீது கார் மோதி விபத்து! மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி!
சேலம் மாவட்டம் அரியனூரில் அமைந்துள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்த 7 மாணவர்கள் இன்று ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
கார் அவிநாசி பழங்கரை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ், சூர்யா, வெங்கட் மற்றும் சின்னசேலத்தில் சேர்ந்த இலவரசன், வசந்த் ஆகிய 5 மாணவர்களும், கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், தருமபுரியை சேர்ந்த சந்தோஷ், சேலத்தைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.