மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"போதை படுத்தும் பாடு..." 92 வயது மூதாட்டியின் மீது பாய முயன்ற 45 வயது நபர்.! காவல்துறையிடம் ஒப்படைப்பு!
சென்னை கீழ்பாக்கத்தைச் சார்ந்த 92 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 45 வயது நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கீழ்பாக்கம் பகுதியைச் சார்ந்த 92 வயது மூதாட்டி நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த செந்தில் என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் போதையில் பாட்டியிடம் அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி அலறி சத்தம் போட்டு உள்ளார்.
பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற அந்த நபரை பிடித்து உதைத்தனர். மேலும் இது தொடர்பாக கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செந்தில் என்ற நபரை கைது செய்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.