பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட தொழிலாளி.! சென்னை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!



murdered-in-railway-station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கூலித் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி ஒருவர் கல்லால் அடித்து படுகொலை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் சென்னையில் தங்கியிருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். ரயில் நிலையத்தில் பயணியரின் உடமைகளை கூலிக்கு துாக்கி செல்வதில், ராஜாவுக்கும் அவருடன் வேலை செய்யும் குமார் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. 

இந்நிலையில், ராஜா, நேற்று முன்தினம் மாலை, சென்ட்ரல் நிலையத்தில் பயணியர் காத்திருக்கும் பகுதியில் படுத்திருந்தார். அப்போது அங்கு பெரிய கல்லுடன் வந்த, குமார், ராஜாவின் தலையில் கல்லை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைப்பார்த்த பயணிகள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயமடைந்த ராஜாவை, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, ராஜா நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீசார், வழக்குப் பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர்.