தாய் வாங்கிக்கொடுத்த செயின் மாயமானதால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் விபரீத முடிவால் சோகம்.!



Nagapatnam Vedharanyam Native College Student Suicide 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், மஞ்சகன்னி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரின் மகன் விஜயன் (வயது 18). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேல்கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருத்தவாறு, சிவில் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

நேற்று இரவில் 10:30 மணியளவில் தனது அறையில் இருந்து 3வது மாடிக்கு சென்ற விஜயன், மாடிப்படியில் அமர்ந்து செல்போனில் மெசேஜ் செய்துகொண்டு இருந்துள்ளார். இதனிடையே, காலை 06:30 மணியளவில் பிரேம் ஆனந்த் என்ற மாணவர்கள் படிக்கச் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். 

அச்சமயம், விஜயன் மூன்றாவது தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அலறியுள்ளார். பின் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த நிர்வாகத்தினர், வேல்கவுண்டன்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த மாணவர் நள்ளிரவு 12:30 மணிவரை தனது அம்மா வாங்கிக்கொடுத்த செயின் மாயமாகிவிட்டதாக வருத்தத்துடன் அசோக் என்ற மாணவரிடம் வேதனையை பகிர்ந்து வந்துள்ளார்.

அவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் இரு, நாளை செயின் குறித்து பார்க்கலாம் என ஆறுதல் கூறி அமைதிப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதன்பின்னரே விஜயனின் தற்கொலை நடந்துள்ளது. இதனால் செயின் காணாமல் போன விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடந்து வருகிறது.