மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1,00,800/- பணம் பறிமுதல்; தொடரும் விசாரணை.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார்.
இங்கு இலஞ்ச முறைகேடுகள் நடப்பதாக இலஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இலஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள், நாகப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
மாலை தொடங்கிய சோதனை அதிகாலை 3 மணியை கடந்து விடியவிடிய நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 இலட்சத்து 800 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.