மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலட்சியம்... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீரென்று கருப்பாகிய 1 1/2 வயது குழந்தையின் கை... நேர்ந்த சோகம்.!
அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தைக்கு கையை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. இந்த சம்பவம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது குழந்தைக்கு தலையில் நீர் வடியும் பிரச்சனை இருந்ததால் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். இலையில் குழந்தைக்கு டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது . ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையின் கை கறுப்பாக மாறி உள்ளது. இது பற்றிய செவிலியர்களிடம் கேட்டபோது நார்மலான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் குழந்தையின் கை மேலும் அழுகிய நிலையில் காணப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கையை அகற்ற வேண்டும் என கூறி இருக்கின்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றி இருக்கின்றனர். அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் "இது தொடர்பாக விசாரணை குழு அமைத்திருப்பதாகவும் விரைவிலேயே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் குழந்தையின் கை பாதிப்படையாமல் இருக்க அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவன் மனைவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தை குறை மாசத்தில் பிறந்ததால் அதற்கு இதயம் மற்றும் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றிற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.