கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... புயல் உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
அந்தமான், அதை ஒட்டிய கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை வரும் 8-ஆம் தேதி புயல் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை நோக்கி வரும் 8-ஆம் தேதி நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.