தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை.? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!



New year celebrations will ban?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஓமிக்ரான் வகை அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகள் நீடிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர், சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததும் மாலை அல்லது நாளை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.