பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மறுஉத்தரவு வரும் வரை முட்டை, கோழி இறைச்சி கொண்டு வர தடை - திடீர் அதிரடி உத்தரவு அமல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பண்ணையில் 3 நாட்களுக்கு 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்தது. இவைகளுக்கு மேற்கொண்ட சோதனையில் பறவை காய்ச்சல் உறுதியாகவே, அங்கிருந்த 25 ஆயிரம் கோழிகளை அழிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி உட்பட பல சுற்றுலா தலங்களுக்கு கூடலூர் வழியே வருகை தரலாம். இதனால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட எல்லையான காக்கநல்லா, நம்பியார் குன்னு, சொலாடி, தானூர், பூளக்குன்னு, பாட்டவயல் உட்பட 8 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் இருந்து இறைச்சி, முட்டை போன்றவை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்பதால், அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.
அதனைப்போல, மறு உத்தரவு வரும் வரை கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து முட்டை, கோழி இறைச்சிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 7 பேர் கொண்ட குழுவை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளது.