மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் ஆர்டர் செய்தவற்கு கல் பார்சல்... ஆன்லைனில் பொருள் வாங்கிய வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி.. பகீர் வீடியோ வைரல்.!
அமேசான், பிளிப்கார்ட், மீசோ உட்பட பல்வேறு ஷாப்பிங் ஆப்-கள் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்தால் அவை ஒருசில நேரம் சரிவர வந்து சேர்வது கிடையாது. நாம் ஆர்டர் செய்தது ஒரு பொருளாக இருந்தால், வந்தது மற்றொரு பொருளாக இருக்கும்.
சில நேரங்களில் விலைஉயர்ந்த செல்போன் போன்ற பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல், சோப்பு டப்பா போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பேக்கோரையை சேர்ந்தவர் மோதிலால். இவர் சமீபத்தில் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு நேற்று பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பார்சலை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சியாக செல்போனுக்கு பதில் வெள்ளை நிறத்திலான சிறிய கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மோதிலால், அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.