திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! துணிச்சலாக பெண் எடுத்த அதிரடி முடிவு.!
சென்னையை சேர்ந்த 23 வயது நிரம்பிய பெண் தனது பெற்றோருடன் கடந்த 28 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் அந்த பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த அந்த பெண் பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே பேருந்து வரும் போது காவல்துறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பேருந்துக்குள் ஏறி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோதண்டராமன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோதண்டராமனை கைது செய்தனர்.