ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் சிக்கிய வாலிபர்.!
சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்குடி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ரமேஷ். 35 வயது நிரம்பிய இவர், அப்பகுதியில் 14 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியை தான் கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் உனது குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரளித்த புகாரின் பேரில், போலீசார் ரமேசை போக்சோவில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.