என் மகன் சாகல சாமி..! சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞரின் இதயம்..! கண்கலங்க வைத்த சம்பவம்..!



Organ transplant performed in Salem government hospital

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்நார்யப்பனூர் அடுத்து உள்ள பெருமாகவுண்டம் பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (20). இவர், சேலத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி சுரேந்திரன் நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். சுரேந்திரனின் நிலையை அவரது பெற்றோரிடம் எடுத்து கூறி அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். பெற்றோரும் உடல் உறுப்புக்களை தானம் வழங்க முன்வந்தனர்.

இதனை அடுத்து சுரேந்திரனின் இதயம், நுரையீரல், இரு சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதில் நுரையீரல், ஒரு சிறுநீரகம் மணிப்பால் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

சுரேந்தரின் இதயம் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதயம் 6 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்ற கட்டாயத்தால் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் விமானம் மூலம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

Mysteries

இதனை அடுத்து சேலம் மருத்துவமனையில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையாயத்தில் இருந்து மருத்துவமனைக்கும் இடையே உள்ள சாலைகளை போலீசார் உதவியுடன் குறுகிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து சரியான நேரத்திற்கு இதயம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சுரேந்தரின் பெற்றோர், தங்கள் மகன் இறக்கவில்லை என்றும், இன்னொருவரின் ரூபத்தில் உயிரோடுதான் இருக்கிறான் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.