மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சாந்தி. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். கணவர் இறந்த பின்னர் சாந்தி தனது மகள் துளசிதேவியுடன் வசித்து வந்துள்ளார். துளசி தேவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சாந்தியின் கணவர் இறந்தபிறகு, இவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடிப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். துளசியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் கணவரை விட்டு பிரிந்த துளசி, தனது குழந்தைகளுடன் தாயுடன் வசித்து வந்ததுடன், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
சாந்தி இரண்டு நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். சாந்தி வீட்டில், எப்போதும் குழந்தைகள் அழும் சத்தமும், நாய் குரைக்கும் சத்தமும் கேட்டு கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், நேற்று முன்தினம் மாலையில் இருந்து, எந்த சத்தமும் இல்லாமல் வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை, வீட்டு உரிமையாளர் வந்து பார்த்தபோது, சாந்தி துாக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சென்றபோது துளசிதேவி மற்றும் இரண்டு குழந்தைகளும், அருகில் வளர்ப்பு நாய்களும் இறந்து கிடந்துள்ளன.
இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துளசிதேவி, சில ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் துளசிதேவியும், கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். துளசிதேவிக்கு, சில இளைஞர்களுடன் தவறான உறவு இருந்த நிலையில், சாந்தியும் துணை போனதாக தெரிகிறது. இதையறிந்த, வெளிநாட்டில் இருந்த துளசிதேவியின் சகோதரர்கள் செய்து வந்த பண உதவியை நிறுத்தினர். தற்போது, ஊரடங்கால் வேலை இல்லாமல் போக, வறுமையின் காரணமாக, குழந்தைகள், நாய்களுக்கு விஷம் கொடுத்து, தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.