மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அளவு கடந்த காதல்... மனைவி வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தற்கொலை... கணவர் எடுத்த சோகமான முடிவு... RTO விசாரணை.!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே நேரத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(28). இவருக்கும் சுவிதா(22) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சதீஷ் பிரின்டிங் பிரசில் வேலை செய்து வந்தார் . திருமணமான நாளிலிருந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தனர்.
சதீஷ் பணிக்கு சென்றாலும் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்ந்து காதல் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டிருந்தார் சுவிதா. அதற்கு சதீஷும் பதிலளித்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் பணியிலிருந்த போது அவரை வீட்டிற்கு உடனடியாக வருமாறு அழைத்திருக்கிறார் சுவிதா. பணியில் இருப்பதால் உடனடியாக வர முடியாது என தெரிவித்துள்ளார் சதீஷ். இந்நிலையில் மதியம் 3:45 மணி அளவிற்கு வீடியோ கால் மூலம் சதீஷை தொடர்பு கொண்ட அவரது மனைவி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு வீடியோ கால் இணைப்பை கட் செய்யாமலேயே தூக்கில் தொங்கி இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் உடனடியாக வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு பட்டுக்கோட்டையா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த சதீஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்று நேற்று மதியம் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே நேரத்தில் 3:45 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார். இளம் தம்பதிகள் அடுத்தடுத்த நாளில் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.