மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பேருந்தில் ஓ.சி பயணம்.. 6 வடமாநில இளைஞர்கள் அட்டகாசம்.. நடத்துனர் மீது தாக்குதல்.!
பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில், பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் வரை நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில், நேற்று காலை ஓட்டுநராக பாலகிருஷ்ணன் எனபவரும், நடத்துனராக ஆறுமுகம் (வயது 50) என்பவரும் பணியாற்றி இருக்கின்றனர்.
பேருந்து நேற்று மாலை நேரத்தில் பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், சிறுவாச்சூர் கிராமத்தில் வடமாநில இளைஞர்கள் 6 பேர் ஏறியுள்ளனர். இவர்கள் 6 பேரும் முன்புற வாயிலில் 3 பேர், பின்புற வாயிலில் 3 பேர் என தனித்தனியே ஏறி இருக்கின்றனர்.
நடத்துனர் ஆறுமுகம் பின்புற படிக்கட்டில் நின்றவர்களிடம் பயணசீட்டு தொடர்பாக கேட்கையில், அவர்கள் முன்புறம் உள்ளவர்கள் எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, முன்புறம் சென்று கேட்டதற்கு, அவர்கள் பின்புறம் என்று தெரிவித்துள்ளனர். அப்போது, அவர்கள் இறங்கும் விஜய கோபாலபுரம் பேருந்து நிறுத்தமும் வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி செல்ல முற்படவே, பேருந்தின் நடத்தினர் ஆறுமுகம் பயணசீட்டு தொகையை கேட்டுள்ளார். பணம் தர மறுத்த வடமாநில தொழிலாளர்கள், நடத்துனர் ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். இதனால் ஆறுமுகத்தின் தலையில் காயம் ஏற்பட, கயவர்கள் அனைவரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பேருந்தின் நடத்துனர் ஆறுமுகத்தை மீட்ட ஓட்டுநர் மற்றும் பயணிகள், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகோபாலபுரம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அபிநந்தன் குமார்தாஸ் என்ற இளைஞரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவருடன் பயணம் செய்த பிற தொழிலாளர்களையும் தேடி வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்ததற்கு பயணசீட்டு எடுக்க சொன்ன அரசு பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.