#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன நடக்குது.. இன்று காலை கட்சியில் சேர்ந்தவருக்கு மதியம் எம்.எல்.ஏ சீட் வழங்கிய பாஜக! ஆச்சரியத்தில் மக்கள்..
இன்று காலை கட்சியில் இணைந்தவருக்கு இன்று மதியமே எம்.எல்.ஏ சீட் வழங்கியுள்ளது பாஜக.
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, தேர்தல் வாக்குறித்து, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தனக்கு சீட் தரவில்லை என்ற அதிருப்தியில் திமுக கட்சியில் முக்கிய புள்ளியும், தற்போதைய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சரவணன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று காலை திமுகவில் இருந்து விலகி தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில், இன்று காலை திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. காலையில் கட்சியில் இணைந்தவருக்கு மதியம் எம்.எல்.ஏ சீட்டா என கட்சி தொண்டர்கள் முதல் மக்கள் வரை ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.