மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கலுக்கு ஊருக்கு போறிங்களா.? பஸ்சில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிங்க....!
தீபாவளி, பொங்கல் என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். அதுவும் பொங்கல் என்றால் சொல்லவே வேண்டாம். தொண்டர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பண்டிகை வருவதால் மக்கள் இப்போதில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப தொடங்கிவிட்டனர்.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்துதான். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஜனவரி 11 முதல் 21 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அப்படி இருந்தும் இடம் கிடைக்காமல் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நோக்கி ஓடுகின்றனர். ஆனால், இதுபோன்ற பண்டிகை சமயங்களில் சில ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை என்ற பெயரில் தாறுமாறாக பணம் வசூல் செய்கின்றனர். இதுபோற்று அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகள் குறித்து புகார் அளிக்க 1800 425 6151 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு சம்மந்தமாக புகார் கொடுக்க விரும்பினால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் கொடுக்கலாம்.