மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
சமீப காலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்துவருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பாக சிறுவர், சிறுமிகள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் வரையறுக்கப்பட்டு, அவை காவல்துறையினரால் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும் இதுதொடர்பான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது,.
இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.