கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சென்னை புள்ளிங்கோவை மிஞ்சிய கிருஷ்ணகிரி புள்ளிங்கோ.! கையோடு சலூன் கடைக்கு அழைத்துச்சென்ற போலீஸ்.!
சென்னையில் உள்ள இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை தனித்துவமாக காட்டுவதற்காக ஸ்டைலாக முடிவெட்டி அதாவது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் என ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடிவெட்டிகொள்ளும் இளைஞர்களை சென்னையில் புள்ளிங்கோ என்று கூறிகின்றனர். இந்த புள்ளிங்கோ ஸ்டைல் சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் பரவலாகி வருகிறது. இது போன்ற ஹேர் ஸ்டைலை மற்ற மாவட்டங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் மாடர்னாக முடிவெட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் இந்தப் போக்கு ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாக பார்ப்பதால் பல மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்களுக்கு பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடிவெட்டக் கூடாது என்று வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்தனர்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அப்பகுதியில் வந்துகொண்டிருந்தான். இதனைப்பார்த்த காவல் ஆய்வாளர் அந்த அச்சிறுவனை அழைத்து, இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா? படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது எனவும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறி, அந்த சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.