மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா பாதிப்பால் சிறைத்துறை அதிகாரி பலி! சிறையில் கைதிகள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு!
புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். மேலும், புழல் சிறை கைதிகள் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
சென்னை கோடம்பாக்கம் பி.காலனியை சேர்ந்த 54 வயது நபர், புழல் சிறையில் அதிகாரியாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 28ம் தேதி இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. கொரோனா பாதித்த அனைவரும் புழல் சிறைக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புழல் சிறையில் 31 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைத்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சிறை கைதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.