அஞ்சலி செலுத்த வந்த ராகுலுக்கு நேர்ந்த பெரும் சிக்கல், பொறுப்பே இல்லை, பொங்கியெழுந்த தமிழக காங்கிரஸ் தலைவர்.!



protection security worst for ragulgandhi condemned by thirunavukarasar

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார்.

மேலும் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள்,பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

     karunanidhi

அப்பொழுது சரியான கண்காணிப்பு இல்லாததால் தொண்டர்கள் விஐபிக்கள் வரும் பாதை வழியே வர தொடங்கினர். இதனால் அந்த இடமே கூட்ட நெரிசலானது.மேலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

இந்நிலையில் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி விஐபிக்கள் வரும் வழியில் அழைத்து வர முடியாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படி வழியாக அழைத்து வரப்பட்டார்.ஆனால் அங்கும் ராகுல் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக நின்றார்.

karunanidhi

முக்கிய தலைவரான ராகுலுக்கு ஆபத்துகள் அதிகம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு இல்லாத சூழலில் ராகுல் காந்தி இருந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

karunanidhi

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை. இதற்காக தமிழக காவல்துறைக்கு  கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.  ராஜாஜி அரங்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அவர் வலியுறுத்தியுள்ளார்.