மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அங்க, இங்க கைவைத்து காதல் பெயரில் பாலியல் தொல்லை.. பெற்றோருடன் சேர்ந்து கொடூரனுக்கு பாடம் புகட்டிய சிறுமி.!
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் கிராமத்தில் 17 வயது சிறுமி, பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரின் மகன் விஷ்வா (வயது 22).
விஷ்வா சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், பலமுறை காதலை கூறியும் பலனில்லாத நிலையில், சிறுமி விஷ்வாவை எச்சரித்து இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனியே வந்த சிறுமியை விஷ்வா பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிரிடம் தெரிவிக்கவே, பெற்றோரும் விஷ்வாவை கண்டித்து இருக்கின்றனர். இதனை கேட்காத விஷ்வா, சிறுமியின் பெற்றோரையும் மிரட்டி இருக்கிறார்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.