மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: 22 வயது இளம்பெண் காட்டுப்பகுதிக்குள் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொடூர கொலை.. தாயை இழந்து, தந்தையை பிரிந்து.., தஞ்சாவூரில் பயங்கரம்.!
பக்கத்து வீட்டில் வசித்துவரும் உறவினரான நண்பரை, முறைப்பெண்ணை அழைத்துவர அனுப்பி வைக்க, அவர் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து கொலை செய்த துயரம் புதுக்கோட்டையை அதிரவைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, கொசுவபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவரின் மகள் சர்மிளா (வயது 22). இவரின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதனால் ஷர்மிளாவின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்றுவிடவே, ஆதரவற்று இருந்தவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் தங்கிருந்து வேலைபார்த்து வந்துள்ளார்.
அவ்வப்போது விடுமுறை நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சாங்குறிச்சி கிராமத்தில் இருக்கும் தாய்மாமா பிரபுவின் வீட்டிற்கு வருவார். தீபாவளிக்கு சமீபத்தில் அவர் வந்திருந்த நிலையில், சில நாட்கள் அங்கேயே தங்கியுள்ளார். பின் சென்னைக்கு செல்ல தயாராகி இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வல்லம், நாட்டாணி கிராமத்தில் வசித்துவரும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நடந்துளளது. அதற்கு பிரபு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். ஷர்மிளாவும் இவர்களுடன் வளைகாப்புக்கு சென்றுள்ளார்.
பிரபு வீட்டிற்கு திரும்பிவிட, சர்மிளா நாட்டாணியிலேயே தங்கியிருந்துள்ளார். இரவு உணவை முடித்த சர்மிளா, பிரபுவுக்கு தொடர்புகொண்டு தன்னை அழைத்துச்செல்ல கூறி இருக்கிறார். அச்சமயம், பிரபு பக்கத்து வீட்டினை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் மதுபானம் அருந்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
பிரபு அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த காரணத்தால், கருப்பசாமியிடம் தங்கையின் மகளை அழைத்துவருமாறு இருசக்கர வாகனத்தின் சாவியை கொடுத்து அனுப்பியிருக்கிறார். கருப்பசாமியும் சர்மிளாவை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். நடுவழியில், வல்லம் சென்னம்பட்டி காட்டுப்பகுதியில் கருப்பசாமிக்கு குணம் மாறி இருக்கிறது.
சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திய கருப்பசாமி, சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால், சர்மிளா சற்றும் எதிர்பாராத விதமாக அவரை காட்டுக்குள் தூக்கிச்சென்ற கயவன், அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல்போக, இளம்பெண் அலறியும் பலனில்லை.
பலாத்காரத்தை அரங்கேற்றி முடித்த கயவன், சர்மிளா தன்னை காவல் துறையினரிடம் கட்டிகொடுத்திடுவார் என்ற பயத்தில், அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இரவு நேரமாகியும் சர்மிளா வராததால் பதறிப்போன பிரபு கருப்பசாமிக்கு தொடர்பு கொண்டு இருக்கிறார்.
கருப்பசாமி போனை எடுத்து காட்டுப்பகுதியில் தன்னை கும்பல் தாக்கி சர்மிளாவை தூக்கிச்சென்றதாக கூறியுள்ளார். அதிர்த்துப்போன பிரபு காட்டுப்பகுதிக்கு செல்ல, கருப்பசாமியுடன் சேர்ந்து சர்மிளாவை தேடி இருக்கிறார்.
பின் சர்மிளா சடலமாக மீட்கப்படவே, அதனைக்கண்டு பிரபு நிலைகுலைந்து போனார். பின் வல்லம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணையில் கருப்பசாமி உண்மையை ஒப்புக்கொள்ள, அவரை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.