மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா போதையில் அரசுப்பள்ளியில் நள்ளிரவு நேரங்களில் உலாவும் கும்பல்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியைச் சார்ந்த விஜயகுமார். இவர் பாஜக மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்து கஞ்சா மற்றும் மதுபானங்களை அருந்திவிட்டு, லாட்டரி சீட்டு விளையாடி வருவதாக கூறியுள்ளார்.
பல நாட்களாக போதை கும்பலின் அட்டகாசம் இரவு வேலைகளில் தினம்தோறும் பள்ளி வளாகத்தில் நடந்து வந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கோரிக்கையை அமைச்சர் ரகுபதி காணும் வகையில் எக்சில் (ட்விட்டர்) டேக் செய்து தெரிவித்துள்ளார். சரக காவல் துறையினரிடமும் புகார் மூலமாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
@regupathymla
— Vijayakumar Kangiar (@VijayakumarKan8) November 5, 2023
அய்யா நலமா
நான் புதுக்கோட்டை மாவட்டம் ,கீரனூர்
எங்கள் ஊர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரவில் சமூக விரோதிகள்( கஞ்சா,குடி,லாட்டரிசீட்டு) கூடாரம் ஆகிவிட்டது.
உறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். காவல்துறை கண்காணிப்பு தேவை