திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கடலில் மூழ்கிய புதுமாப்பிள்ளை!.. காண்போரை கலங்க வைத்த சோகம்..!
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், எம்.வி.எம்.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மகன் பாபு, 30. இவர் காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு, ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 10 பேர், சேர்ந்து நேற்று காலை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். மாமல்லபுர சிற்ப கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் நண்பகலில் கடற்கரை கோவிலுக்கு வந்தனர்.
இதனையடுத்து, கடற்கரை கோவில் அருகில் கடலில் குளித்தபோது பாபுவை அலை இழுத்துச் சென்றது. கடல் அலையில் சிக்கி தத்தளித்த அவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பாபுவை தேடிய நிலையில், கருங்கல் பாறை கற்குவியல் பகுதியில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அவரது மனைவியும், பெற்றோரும் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் காவல்துறையினர் பாபுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.