மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களின் அசத்தல்!. ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த இளைஞர்கள்!.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிக குறைவாக போனதற்கு முக்கிய காரணமாக தைலமரங்கள் திகழ்கின்றது. அங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து போனதால் விவசாயிகளுக்கும் விவசாயங்களை கைவிட்டு தைலகமரக்கன்றுகளை நட்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் நகர பகுதியின் அருகில் உள்ள அண்டகுளம் சாலை ஓட்டிய பகுதியில் தைலமரம் கன்றுகளை வனத்தோட்டகழகத்தினர் நேற்று நட்டுக்கொண்டிருந்தனர். அதை அதை பார்த்த புதுக்கோட்டையை சார்ந்த "பொறந்த ஊருக்கு புகழ சேரு" குழுவினர் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திந்து இதுகுறித்து விவாதம் செய்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பல வகையான மரங்களை நடுவில் நட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து வனத்துறையினர் இடையில் பலவகையான மரங்களை நட ஒத்துக்கொண்டனர். அடுத்த ஆண்டு முதல் தைலமரம் நடவுசெய்வதை ஓரே அடியாக நிறுத்துவதாக வனத்துறை பதிலளித்துள்ளனர்.