சென்னையை தாக்க துவங்கியது மழை! சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!



Rain started in chennai

கஜா புயலால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது தென் தமிழகம். சில நாட்களுக்கு முன்னர் வந்த கஜா புயலால் இத்தனை வருடங்களாக வளர்த்த மரங்களை இழந்து, வீடுகளை இழந்து, மின்சாரமின்றி தவித்து வருகின்றனர் மக்கள். பொதுவாக மழை, புயலுக்கு பெரிதும் பாதிக்கப்படுவது சென்னைதான். ஆனால் இந்தமுறை சென்னை தப்பித்துவிட்டது என்று எண்ணுவதற்குள் இன்று சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

கஜா புயலின் தாக்கத்தின் காயம் மறையாக நேரத்தில், வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

Kaja cyclone

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு பகுதியில் நகர்ந்து, நாளை கடலூர் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருவதால் பீதியில் உள்ளனர் மக்கள் .