தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சாத்தான்குளம் விவகாரத்தில் அவர்களை சத்தியமா விடவே கூடாது! ரஜினி ஆவேசம்!
காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை தெரிவிக்கிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தந்தை - மகன் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
நீதித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் பதிவிடுள்ள ட்வீட்டில், சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும், சத்தியமா விடவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.