மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் காலமானார்.!
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மூச்சுத்திணறல் காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.