மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாவது திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் டார்கெட்: ஒரேநாளில் 7 பெண்களை ஏமாற்றிய மன்மத இளைஞன் கைது., மாவுக்கட்டு.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் வணங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா. இவர் திருமண தகவல் இணையதளத்தில் தனது விபரங்களை பதிவிட்டு, விவாகரத்தான பெண்களுக்கு வலைவீசி இருக்கிறார்.
இவர்களின் வலையில் விழும் பெண்களை இலாவகமாக பேசி, ஓட்டலுக்கு வரவைத்து அவர்களின் நகைகளை திருடிவிட்டு தலைமறைவாவது ஐவரின் வாடிக்கையான செயல் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மதுரையில் இருக்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் வெவ்வேறு சமயத்தில் பெண்களை வரவழைத்து ஏமாற்றியது நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தல்லாகுளம் மற்றும் கோ.புதூர் காவல் நிலையங்கள் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பொறியியல் பட்டதாரி கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவரை காவல்துறையினர் பிடிக்க முயற்சித்தபோது, கீழே விழுந்து கால்களையும் உடைத்துக்கொண்டார்.