மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; சிகிச்சைக்கு சென்ற இடத்தில் 70 வயது மருத்துவர் அநாகரீக செயல்.. அதிரடி கைது.!
சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த மருத்துவர் ஜபருல்லாகான் (வயது 70), கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிப்பதாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மருத்துவரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.