அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
அரசுப்பேருந்தில் படிக்கட்டு பயணம்.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்..!
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர், பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியாகினார்.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் பேருந்துகள் மற்றும் இரயிலில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், அதுதொடர்பாக போக்குவரத்துத்துறை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தலைநகர் சென்னையில் காவல் துறையினர் தொடர்ந்து மாணவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் பேருந்துகளின் படிகளில் நின்று பயணம் செய்வதை குறைக்க ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதனை கண்காணிக்க வேண்டும். பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் வழித்தடம் குறித்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் தினேஷ்குமார், பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பேருந்தின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைப்போல, காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவர் பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த போது, தவறி விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கல்லூரிக்கு செல்கையில் நேர்ந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.