அச்சச்சோ.. கொரோனாவில் இருந்து மீண்டவர்களை குறிவைக்கும் டெங்கு.. மக்களே உஷார்.!
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பருவமழையின் காரணமாக இந்தியாவிலும் டெங்கு பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.
இதனிடையே, கொரோனா பாதித்து மீண்ட நபர்களை டெங்கு குறிவைத்துள்ளதாக ஆய்வில் முதற்கட்டமாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
வாரணாசி பனாரஸ் இந்து பல்கலை., மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மீண்ட நபர்களிடம் டெங்கு பாதிப்பு அதிகளவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்ட நபர்களுக்கு, டெங்கு பாதிப்பு ஏற்பட 2 மடங்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.