வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு...!



Rumors about Northern State workers; Case filed against Tamil Nadu BJP leader Annamalai...

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். 

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மீது வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வதந்தி பரப்புதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டுதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.