பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கொரோனா பாதிப்பு உறுதி.! முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி.!
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.
தற்போது தமிழகத்திலும்,மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. சமீப காலமாக பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிட்டது.
சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.