மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொறுக்கியெடுத்த கனமழை.. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 பேருக்கு நடந்த சோகம்.!
2 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்த கனமழையால், கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் 3பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பதவியில் வசித்து வந்தவர் ஶ்ரீதர். இவருக்கு சுமார் 50 ஆண்டுகள் பழமையான மாடி வீடு ஒன்று இருந்த நிலையில், அந்த வீடு சேதமடைந்து இருந்ததனால் இவர் தனது குடும்பத்தினருடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து நேற்று சேலத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், முன்பே சிதிலமடைந்த கட்டிடத்தின் மாடி சுற்று சுவர் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது.
இதில், அந்தக் கட்டிடத்திற்கு கீழாக நின்று பேசிக்கொண்டிருந்த விஸ்வநாதன் ஹரிஹரன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மீது சுவரின் பாகங்கள் விழுந்த நிலையில், மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.