சசிகலா மீண்டும் அரசியலில் நுழைய போடும் முதல் பிள்ளையார் சுழி.! தேதி குறிச்ச சசிகலா.! வெளியான முக்கிய தகவல்.!



sasikala will go to jeyalalitha memorial

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனாலும், டிடிவி தினகரனின் அ.ம.மு.க தனித்து போட்டியிட்டு அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பி வருகிறது. 

sasikala

சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சசிகலாவுடன் பேசியதால் அதிமுக-விலிருந்து சிலர் நீக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால், சசிகலா ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாகவும், அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், முதலில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, அதன் பின் இந்த சுற்றுப்பயணத்தை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதிமுக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினாலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வருகின்ற  23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.