திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காட்டிற்கு சென்ற 7ம் வகுப்பு பள்ளி மாணவன் அடித்து கொலை.. போலீசார் விசாரணை.!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் இளைய மகன் அரவிந்த் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அரவிந்த் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் விசாரித்த போது அரவிந்தை அதே ஊரை சேர்ந்த இளவரசன் என்பவர் உடும்பு பிடிப்பதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்குள்ள ஆற்றங்கரைக்கு தேடி சென்ற போது அங்கு புதூர் ஒன்றில் அரவிந்த் சீருடை முழுவதும் நனைந்த நிலையில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். அருகில் இளவரசன் ஆற்றில் குளித்துவிட்டு தனது துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் இளவரசனை கைது செய்து விசாரணை வருகின்றனர். இதில் இளவரசன் மனநலம் பாதிக்கப்பட்டு எதற்காக ஆலோசனை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இளவரசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.