#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடாமல் பெய்துவரும் மழை! அடிமேல் அடிவாங்கும் புதுக்கோட்டை மக்கள்!.
வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்றிரவு விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கிய மழை இரவு முழுவதும் விடாமல் பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலையும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கஜா புயலில் இருந்து மீலாமல் வீடுகள் இழந்து தவித்துவரும் புதுக்கோட்டை மக்கள், இந்த மழையால் மறுபடியும் புதுக்கோட்டை மக்கள் துயரத்தால் வாடுகின்றனர்.