மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட கடலை ஆலைகளுக்கு சீல்.!
கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தாசில்தார் பொன்மலர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் குணசேகரன், காவல் ஆய்வாளர் அலாவுதீன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடலை அரவை ஆலைகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அதிகாரிகள் சோதனை செய்தபோது, 2 கடலை அரவை ஆலையில் ஊரடங்கு விதிகளை மீறி சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 ஆலைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.