#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படிக்கட்டை தாண்டாதே.! நாகப் பாம்பை வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்த பூனை.!
கோவை, கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் வசித்து வரும் விஜர் என்பவரின் இல்லத்தில் 4 அடி நீளம் கொண்ட ஒரு நாகப்பாம்பு கேட்டை தாண்டி வீட்டிற்குள் வர முயற்சித்தபோது, அந்த வீட்டில் வளர்ந்து வந்த பூனை அந்த பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது. பூனை சீருவதை கண்ட வீட்டிலிருந்த நபர்கள் கதவை மூடிக்கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே உடனடியாக அங்கு வந்த பாம்பு பிடி வீரர் அந்த பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்துள்ளனர். பாம்பும், பூனையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாம்பும், பூனையும் 15 நிமிடங்கள் வரையில் ஆடாமல், அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.