ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்! காத்திருக்கும் உறவினர்களும், பொதுமக்களும்!!

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்த இராணுவ வீரர்களின் வாகனத்தில் பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.
தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த 28 வயது நிரம்பிய சுப்ரமணியன், மற்றும் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரின் உடலும் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து அவர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.